search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா. பொது செயலாளர் வருத்தம்"

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு ரத்தானது வருத்தம் அளிக்கிறது என ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    நியூயார்க்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு ரத்தானது வருத்தம் அளிக்கிறது என ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஐ நா பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். #TrumpKimSummit #KimJongUn #DonaldTrump
    ×